லக்னோ : தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்துள்ள கதம்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது.
இதுதொடர்பாக, இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கதம்பூரில் அனல் மின் உலை அமைப்பதற்காக இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், 2014ம் ஆண்டில், நிறைவடைய உள்ள இந்த திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அணுஉலை, அமைப்பதற்கு 2,500 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணுஉலை அமைப்பதன் மூம்ல 800 பேருக்கு நேரடியாகவும், 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என்றும், இந்த அணுஉலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 75 சதவீதம் மாநில அரசு உபயோகத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக, முதல் பாய்லர் நிறுவும் பணி இந்த இறுதிக்குள்ளும், இரண்டாவது பாய்லர் அமைக்கும் பணி 2011ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply