லண்டன் : காமன்வெல்த் போட்டி துவக்க மற்றும் நிறைவு விழாக்களில், ஒப்பந்தப் பணிகள் மேற்கொண்ட பல நிறுவனங்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குகள் தொடுக்கத் திட்டமிட்டுள்ளன.
டில்லியில் சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதன் துவக்க மற்றும் நிறைவு விழாக்களில், ஒளி, ஒலி அமைப்பு, வாண வேடிக்கை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில், இந்நிறுவனங்களுக்கு போட்டி அமைப்பாளர்கள் தர வேண்டிய பல கோடி ரூபாய் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. நிறுவனங்கள் கொண்டு வந்த பல்வேறு கருவிகள் அனைத்தும் அவர்களின் நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, சுவீடன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்நிறுவனங்கள், இந்தப் பிரச்னையால் கொந்தளிப்பு அடைந்துள்ளன. இதுகுறித்து இந்நிறுவனங்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு பல முறை, மொபைல் போன், இ-மெயில் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தகவல் அனுப்பினாலும் பதில் எதுவும் வரவில்லை.அதனால், போட்டி அமைப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளன.
Leave a Reply