கொழும்பு:சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்யும் விதத்தில், இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே, சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இருநாடுகளுக்கிடையே துவங்கப்படும் கப்பல் போக்குவரத்துக்கு, இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் இது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.துவக்கத்தில், கொழும்பு – தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். பின், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பிற துறைமுகங்களை இணைக்கும் விதத்தில், கப்பல் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும்.இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply