சென்னை : சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதை, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து சிறுபான்மையின மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையாக 19.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரத்து 79 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் 8.66 கோடி ரூபாயும், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான திட்டத்தின் கீழ், 1,809 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 4.73 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 32.41 கோடி ரூபாயை கல்வி உதவித் தொகையாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 531 சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கும் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இது கடந்த ஆண்டை விட 5.91 கோடி ரூபாய் கூடுதலாகும். நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், துறை செயலர் ராமநாதன், சிறுபுõன்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் சேவியர் அருள்ராஜ், ஆணையர்கள் பஷீர் அகமது, அண்ணாமலை கலந்து கொண்டனர்.
Leave a Reply