புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் 25 பைசா காலாவதியாகிறது. அதன் பிறகு 50 பைசா மட்டுமே குறைந்த பட்ச நாணயமாக புழக்கத்தில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது நாட்டில் பண புழக்கம் அதிகரித்து விட்டதால், ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணயங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. எனவே, அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை 25 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும். அதன் பிறகு இந்த நாணயங்களை புழக்கத்தில் இருந்து நீக்கி விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஜூலை மாதம் முதல் குறைந்த பட்ச நாணயமாக 50 பைசா மட்டுமே புழக்கத்தில் இருக்கும். எனவே, இதற்கேற்ப பொருட்களின் விலையை அச்சிடும் படி வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply