சென்னை : பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் பொருட்டு, டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : சபாநாயகர் மீராகுமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், பிரதமரின் அறிவுரையை மீறி, நிதி மற்றும் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து, எந்த கொள்கையையும் கடைபிடிக்காமல், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, தன்னிச்சையாக நாட்டின் சொத்தை அடி மாட்டு விலைக்கு தாரை வார்த்து இருக்கிறார் முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா. இதன் விளைவாக, இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் எல்லாம் ஒரு சில மாதங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிவிட்டன. ஆனால், உரிமத்தை கொடுத்த மத்திய அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள், அந்தத் துறையில் அனுபவம் இல்லாத, லெட்டர் பேடு நிறுவனங்கள். இந்த ஊழலின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி கணக்கிட்டு இருக்கிறார். இந்த இமாலய ஊழலில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தில், பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த இமாலய ஊழலில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தில், பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பார்லிமெண்டை முடக்கின. இந்நிலையில், பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், அந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் பொருட்டு நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டுமென்று நாராயணசாமி தெரிவித்தார்.
Leave a Reply