புதுடில்லி : ஜப்பானிய டயர் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன் டிரக், பஸ்களுக்கான ரேடியல் டயர் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தூரில் இருக்கும் தொழிற்சாலையில் ரூ. 170 கோடி முதலீடு செய்கிறது.
மே முதல் டயர் தயாரிப்பு துவங்கும் என தெரிகிறது. பிரிட்ஜ்ஸ்டோன் பஸ, ரேடியல் டயர்ஸ் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இவை குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தூர் தொழிற்சாலையில் கார் டயர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ரூ.170 கோடி முதலீடு மூலம் பஸ், டிரக் ரேடியல் டயர் தயாரிக்க தேவையான இயந்திரங்கள் பொருத்தப்படும் என பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஹிரோமி தனிகாவா தெரிவித்தார்.
Leave a Reply