தி.மு.க.வுடன் தர்மயுத்தம்: ஜெயலலிதா ஆவேச பேச்சு

posted in: அரசியல் | 0

எம்.ஜி.ஆர். நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இன்று காலை 10.30 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் கடை பிடித்து வருகிறோம். இந்த முறை விரைவில் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் கூடியிருக்கிறோம்.

இந்த நேரத்தில் அ.தி.மு.க. கடந்து வந்த வெற்றிப்பாதையையும், சந்தித்த சோதனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். திருக்குவளையில் இருந்து சென்னைக்கு வந்த கருணாநிதி அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட திட்டமிட்டார். ஆனால் அ.தி.மு.க.வை நிறுவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி உருவான சில மாதத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் முதல் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து 1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்- அமைச்சராக பொறுப்பேற்றார். இதை கண்டு பொறுக்காத கூட்டம் 1980- ல் அ.தி.மு.க. அரசை கலைக்கச் செய்தது. ஆனால் சில மாதங்களில் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். கட்சிப்பணி, ஆட்சிப் பணி ஆகிய இரண்டையும் ஒன்றாக கவனிக்க முடியாத சூழ்நிலையில் 1983- ல் என்னை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். 1984- ம் ஆண்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினராக அனுப்பி வைத்தார்.

எதிர்பாராத விதமாக 1984- ம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு அமெரிக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஆண்டு இறுதியில் வந்த பொதுத்தேர்தலில் தேர்தல் களத்தில் புரட்சித் தலைவர் இல்லாத சூழ்நிலையில் நான் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சிக்கு வெற்றிக்கனியை ஈட்டித்தந்தேன்.

3- வது முறையாக புரட்சித் தலைவர் முதல்- அமைச்சர் ஆனார் 1987- ல் அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து துரோகிகள் துணையோடு கழகத்தை பிளவு படுத்தினார்கள். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989- ல் பிளவு பட்டு கிடந்த கழகத்தை ஒன்றிணைத்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு புத்துணர்ச்சி ஏற்படுத்தினேன்.

அதைத் தொடர்ந்து மதுரைகிழக்கு, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால் 1991- ல் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது. அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று நான் முதல்- அமைச்சர் ஆனேன்.

என்னுடைய ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம். 8- வது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கம், கோயம்பேடு பஸ் நிலையம் உள்பட பல சாதனைகள் படைத்தோம். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. 1996 தேர்தலில் கழகத்துக்கு எதிராக பொய்யையும், புரட்டுகளையும் வெளியிட்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் கருணாநிதி.

1996- 2001 வரை கருணாநிதி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை என்னை பழிவாங்குவதையே குறிக்கோளாக கொண்டு இருந்தார். எனக்கு எதிரான பொய் வழக்குகளை நீதி மன்றத்தில் சந்தித்தேன். 12 வழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வந்தது.

ஒரு வழக்கு அவர் களாலேயே வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் வழக்கு என்பது தெளிவானது. அனைத்து தடைகளையும் மீறி 2001 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்-
அமைச்சர் ஆனேன். திருக்கோவில்கள், தேவால யங்கள், மசூதிகளில் அன்னதான திட்டம், மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள், உழவர் பாதுகாப்பு திட்டங்கள், மழை நீர் சேமிப்பு திட்டம் இப்படி பல முத்தான மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறியது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வுகாண கருணாநிதியின் தடைகளையும் மீறி புதிய வீராணம் திட்டத்தினை நிறைவேற்றினேன். சென்னையின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால் அந்த திட்டத்தை இன்று வரை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அதே போல் நான் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கு இலவச சைக்கிள் இலவச பாடபுத்தகம் போன்ற திட்டங்களை தவிர்க்க முடிய வில்லை.

இப்படி தவிர்க்க முடியாத மக்கள் நல திட்டங்களை தந்த மாபெரும் மக்கள் சக்திதான் அ.தி.மு.க. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி நிறைவேற்ற முடியாத இலவச திட்டங்களை அறிவித்தார். இப்போது அலங்கோல ஆட்சி நடக்கிறது. 6 1/2 கோடி மக்களை வேதனையில் தள்ளியிருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, நில அபகரிப்பு, திரைப்பட துறையில் தலையீடு, சட்டம்- ஒழுங்கு சீர் குலைவு சமூக விரோதிகளுக்கு துணை போதல் நடைபெறுகிறது.

மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், தமிழகத் துக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்கள்.

தி.மு.க.வுக்கும், அ.தி. மு.க.வுக்கும் நடை பெறும்யுத்தம், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம். 3 முறை புரட்சி தலைவர் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார். நான் 2 முறை வீழ்த்தினேன். ஆனால் நிரந்தரமாக இதுவரை அகற்ற முடியவில்லை.

எதிரிகளை தாக்கும் விதத்திலும் சில வழிகள் உண்டு. லேசாக தாக்கினால் தள்ளாடுவார்கள். பல மாக தாக்கினால் விழுந்து விடுவார்கள். ஆனால் எழுந்து விடுவார்கள். இனி எதிரிகள் எழுந்திருக்க முடியாதபடி நம்முடைய அடி மரண அடியாக இருக்க வேண்டும்.

2011- ல் அ.தி.மு.க. ஆட்சி அமையப்போவது உறுதி. அந்த அளவுக்கு இந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் எல்லாம் துணி வோடு பணியாற்றுங்கள் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள் உங்களுக்கு வழி காட்ட துணை நிற்க நான் இருக்கிறேன். நமக்கு வாக்களிக்க மக்கள் தயா ராகி விட்டார்கள். அந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்க நீங்கள் தயாராகுங்கள்.

உங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை ஈட்டுங்கள். புதிய வரலாறு படைக்க உற்சாகத்துடன் பணியாற்றுங்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்நோக்கி செல்கிறது. மீண்டும் தமிழகத்தை முன்னோக்கி கொண்ட வர சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலை நாட்ட புரட்சித் தலைவரின் நல்லாட்சி அமைய இந்த நாளில் சபதம் ஏற்போம். வெற்றிக்கனியை பறிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பொன்னையன் உறுதி மொழியை வாசிக்க தொண்டர்கள் திருப்பிச் சொன்னார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செங் கோட்டையன், தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம. வேலுச்சாமி, வளர்மதி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், செந்தமிழன், எம்.பி.க்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பாலகங்கா, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, பதர்சயீத், சீனிவாசன்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் கோதண்டராமர், ஸ்டிக்கர் ரவி, ஏ.ஏ.அர்ச்சுனன், விஜய ராமகிருஷ்ணா, கவிஞர் வீரைகறீம், சந்தோஷ், அண்ணாநகர் பகுதி பொருளாளர் பாண்டு ரங்கன், மூலக்கடை சக்தி, ஜம்புலி வடிவேலு, கே.கே.மூர்த்தி, ராமலிங்கம், ஆர்.டி.சாம்சன், தி.நகர் சி.பி. அசோக், எஸ்.ஆர். விஜயகுமார், சைதை சி.எம்.சாமி, அண்ணாநகர் ஏ.இ. வெங்கடேசன் தயாளன், பவானி சங்கர், முகப்பேர் இளஞ்செழியன், பிராட்வே எல்.குமார், கேபிள் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் கோ. செழியன், அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை பொருளாளர் டி.ஈஸ்வரன், டி.வள்ளுவன், தி.நகர் பிசத்யா, எஸ்.எஸ்.எஸ்.ராமு, பரணி பிரசாத், மயிலை ராஜேஷ்கண்ணா, சிட்கோ சீனு, துறைமுகம் இன்பநாதன், கஜேந்திரபாபு, பேராசிரியர் ரவிசந்திரன், கே.புருசோத்தமன், பொன்சேது, விஜயகுமார், நிக்கோ பிரபு.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து, சென்னை மண்டல செயலாளர் சேகரன், சங்கர பாண்டியன், திருநாவுக்கரசு ஆகியோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டைரக்டர் செல்வபாரதி, வக்கீல் ராஜீ¢ காந்தி, ராஜா, ஆனந்தராஜ், சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தே.மு.தி.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு கட்சி தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் அவைத் தலைவர்பண்ருட்டி ராமசந்திரன், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் யுவராஜ், செந்தாமரைக் கண்ணன், வி.என்.ராஜன், சுரேஷ்குமார், விசாகன் ராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிய நீதிக்கட்சி சார்பில் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முமக், தலைமை நிலைய செயலாளர் ரவிக்குமார், அமைப்பு செயலாளர் சேதுராமன், இளைஞர் அணி செலாளர் எஸ்.ஏ. ராஜாராம், முரளி உள்பட பலர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினை விடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார். தலைமை நிலைய செயலா ளர் துரை, மாவட்ட செய லாளர்கள் எம்.எம்.ஆர். மதன், கே.ஜி.எஸ். சுரேஷ், நிர்வாகிகள் கருணாநிதி, ஜெயபாண்டியன், கருணா, சித்திரக்கனி, சுரேஷ், பூஞ்சோலை, ரமேஷ், கார்த்தி, மயிலை தாமு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் அவரது நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கி அஞ்சலி செலுத்தினார்கள். எம்.ஜி. ஆரின் வளர்ப்பு மகளும், செவித்திறன் குறைந்தோர் பள்ளி தாளாளருமான லதா ராஜேந்திரன், எம். ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகன் அப்புவின் மனைவி நிர்மலா, சத்திய பாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், பொருளாளர் ராஜன், பொதுச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *