புதுடில்லி: பள்ளி மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான, 3டி பாட முறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
பள்ளி மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளுவதற்கு வசதியாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றின் அடிப்படையான பாடத்திட்டங்கள், “3டி அனிமேஷன்’ முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதை, மத்திய அமைச்சர் கபில் சிபல், டில்லியில் உள்ள குயின் மேரிஸ் பள்ளியில் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசியாதவது: மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் பழைய முறைகளுக்குப் பதிலாக, நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் புதிய முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முறை மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த பாடமுறை, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
Leave a Reply