பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ல் துவக்கம்

posted in: கல்வி | 0

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் தேர்வை துவக்கலாமா அல்லது மார்ச் 2ம் தேதி துவக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமையாக உள்ளதால், மார்ச் 2ம் தேதி தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் நேற்று இரவு தெரிவித்தன.தொடர்ந்து, மார்ச் 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. தற்காலிக தேர்வு அட்டவணைகள், ஓரிரு நாளில் மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டு, அதன்படி அட்டவணை இறுதி செய்யப்படும்.தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த விவரங்கள் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டரில் பதிவு செய்யும் பணிகள் முடிந்துள்ளன. இந்தாண்டு, ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுவார்கள் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *