பேஸ்புக்கும் கூகுளும் அந்தரங்கமான செயலில் : தொடரும் விக்கிலீக்ஸ் வேட்டை

posted in: உலகம் | 0

தான் தொட்டுச்சென்ற ஒவ்வொருவர் மீதும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் சேறுபூசியதாகத் தென்படுகிறது. ஆனால் 2010 இல் தங்களைத் தாங்களே குழப்பத்திற்குள் சிக்கவைத்துக் கொள்வதற்கு அதிக எண்ணிக்கையான அரசியல்வாதிகளுக்கும் பிரமுகர்களுக்கும் இணையத்தளத்தின் உதவி தேவைப்பட்டிருக்கவில்லை.

வாஷிங்டனுக்கான அமெரிக்கத் தூதரகங்களின் கேபிள்களை விக்கிலீக்ஸ் வெளியீட்டு வருகின்றது. அவற்றில் அதிகமானவை இரகசியமான கலந்துரையாடல்கள் ஆகும். ஆனால், இவற்றில் பல விடயங்கள் ஏற்கனவே சர்வதேச உறவுகள் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டவையாகும். விக்கிலீக்ஸின் வெளியீடுகள் இவற்றை உறுதிப்படுத்துவதாகமட்டுமே அமைந்துள்ளன.

ஆயினும் இந்த விடயங்கள் அமெரிக்கா நண்பர்களுக்கோ பகைவர்களுக்கோ சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றவில்லை. உதாரணமாக அமெரிக்க இராஜதந்திரத்தை கீழ் நிலைக்குக்கொண்டு சென்று விட்டதாகத் தென்படவில்லை.

விக்கிலீக்ஸின் ஆவணங்களின் பிரகாரம் சவூதி மன்னர் அப்துல்லா, ஈரானின் நண்பர் அல்ல. அமெரிக்கா ஈரானின் அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை நிறுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.

சீனாவின் அரசியல் குழு உறுப்பினர் ஒருவர் இணையத்தில் பாரிய சேவையை வழங்கிவரும் கூகுள் மீது ஊடுருவித் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார். லிபிய ஜனாதிபதி கடாபி உக்ரைன் தாதி மீது அதிகளவுக்கு தங்கியிருக்கிறார். ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல் ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்பவர் அல்ல. இவை விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அமெரிக்கக் கேபிள்களில் உள்ளடக்கப்பட்டிருந்த சில விடயங்களாகும்.

வேறு ஒன்றும் இல்லாவிட்டால் மட்டுமே இணைய காலகட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத அபகீர்த்தியை இந்த விக்கிலீக்ஸ் விவகாரம் ஏற்படுத்தி இருக்கும் என கருதமுடியும்.

ஒப்பீட்டு அளவில் 2010 ஆம் ஆண்டில் இத்தாலிப் பிரதமர் சில்வியோ பேர்லஸ் கோளி மிகவும் வசைபாடுவதற்கு இலக்காகியிருந்தார். விமர்சனங்களைத் தொடர்ந்து தமது பிரதமரின் அந்தரங்க வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும் என இத்தாலியர்கள் எதிர்பார்த்திருக்கவேண்டும். கடந்த ஆண்டை விட அவர் அதிகளவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலைமையே காணப்பட்டது. இளம் சிறுமி ஒருவருடன் அவரின் தொடர்பு, திருமண வாழ்க்கை முடிவு கண்டமை மற்றும் அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

74 வயதுடைய கன்சர்வேட்டிங் அரசியல்வாதியான பேர்லஸ் கோனி நாட்டிய பெண்ணுடன் அவர் காணப்பட்டதையடுத்து அனைவரின் கவனத்தையும் அந்தவிடயம் கவர்ந்திருந்தது. ரூபி ருபாகுவோரி என்ற அந்தப் பெண் தான் 17 வயதுடையதாக இருக்கும் போது பேர்லஸ்கோனியின் விருந்தில் கலந்துகொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதேசமயம் பிரதமரின் விருந்து நிகழ்ச்சிகளில் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளுக்குத் தான் பயன்படுத்தப்பட்டதாக கரிமா எல்.மம்ரூக் என்ற பெண் கூறியிருக்கிறார்.

இவற்றை அப்பட்டமான பொய் என பேர்லஸ் கோனி நிராகரித்திருக்கிறார். ஆனால், மே மாதம் ரூபியை பொலிஸார் தடுத்து வைத்திருந்த போது அப்பெண்ணை விடுவிக்க தான் தலையிட்டதை பேர்லன்கோனி ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமரின் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் எகிப்து ஜனாதிபதி கொஸ்னி முபாரக்கின் மருமகளை தாங்கள் கைது செய்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இராஜதந்திர நெருக்கடியை தவிர்ப்பதற்கான அந்தப் பெண் விடுதலை செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நீதித்துறையில் பேர்ஸிஸ் கோனியில் தலையீடு தொடர்பாக தாங்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாக எதிரணியினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பேர்லஸ்கோனி;

தன்னினிச் சேர்க்கையாளராக இருப்பதிலும் பார்க்க அழகான சிறுமிகளுடன் விருப்பம் கொண்டிருப்பது சிறப்பானது என கூறியிருந்தார். அந்த விடயம் மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செயற்பாட்டாளர்களும் விமர்சகர்கள் பலரும் தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பிரதமர் வெறுப்பு ஊட்டும் கருத்தை தெரிவித்ததாக சாடியிருந்தனர்.

பேர்லந்தில் முன்னாள் பிரதிப் பிரதமர் அந்திரே லெப்பர் கடந்த பெப்ரவரில் 27 மாத சிறைத்தண்டனையைப் பெற்றார். தனது சுயபாதுகாப்புக் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களிடமிருந்து பாலியல் ரீதியான சலுகைகளை வலியுறுத்தி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதேவேளை, மத்திய பேர்லந்தில் மாவட்ட நீதிமன்றம் சுயபாதுகாப்புக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான கஸ்ரனிஸ்லோ லீக்கிஸிற்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கியது. வல்லுறவு மற்றும் தனது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களிடம் பாலியல் ரீதியான அனுகூலங்களைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் ஐந்து வருட சிறை வழங்கப்பட்டது.

கட்சியின் பிராந்திய அலுவலகத்தில் மீண்டும் வேலையில் சேர்வதற்காக 2001 இல் பாலியல் ரீதியான அனுகூலத்தை வழங்குமாறு லெப்பர் வலியுறுத்தியதாக கட்சி பணியாளர் அனிட்டா குரோஸ் குரோலீக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மெல் கிப்சன் (54 வயது), சார்ஸ்கின் (45 வயது) ஆகிய ஹொலிவூட் உறுப்பினர்கள் தவறான விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து செய்திகளில் பேசப்பட்டனர் கிப்சனின் இளைய மகளான லூசியாவின் ரஷ்யத் தாயார் தான் குழந்தையை வைத்திருக்கும் போது கிப்சன் தன்னை அடித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். சீன் நியூயோர்க்கில் ஹோட்டல் அறையொன்றில் கொக்கெயின் மற்றும் மதுபானத்தை வைத்திருந்ததாபதாகவும், திரைப்பட நடிகையையும் அங்கு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தனது முன்னாள் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நியூயோர்க்கிற்கு சீன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இணையத்தள உலகிற்குச் சென்றால் அங்குள்ள இரட்டை அதிகார மையங்களான பேஸ்புக்கும் கூகுளும் அந்தரங்கமான அவதூறு செய்திகளில் தொடர்ந்தும் சிக்கியுள்ளன. 50 கோடி உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்களை விளம்பரதாரங்களுடன் இந்த உலகின் முன்னணி சமூக கட்டமைப்பானது பகிர்ந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம் உலகில் ஆதிக்கம் மிகுந்த தேடுதல் கம்பனி (கூகுள்) கட்டமைப்புக்கள் மூலம் வாகனங்களின் விபரங்களை சேகரிப்பதாகவும் ஆட்களின் சங்கேத குறிகளை சட்டவிரோதமானமுறையில் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *