பொறியியல் படிப்பில் 2 லட்சம் இடங்கள் அதிகரிப்பு –

posted in: கல்வி | 0

இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் ஏறக்குறைய 2 லட்சம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, இந்தியாவிலுள்ள பொறியியல் படிப்புகளில் மேலும் 2 லட்சம் இடங்கள் அதிகரிக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

மேலும் பொறியியல் கல்லூரி அமைப்பதற்கான குறைந்தபட்ச நில அளவு வரம்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கிராமப்பகுதிகளில் 10 ஏக்கர் நிலமும், நகரப் பகுதிகளில் 2.5 ஏக்கர் நிலமும் குறைந்தபட்ச அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஒரு பொறியியல் கல்லூரியானது, ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர் தொகுதியை(பேட்ச்) படிப்பு முடித்து அனுப்பிய அனுபவம் பெற்றிருந்தால், அக்கல்லூரி ஒரே நிலையில் இரண்டு பாட திட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் மட்டுமல்லாது, மேலாண்மை படிப்புகளில் 80 ஆயிரம் இடங்களும், கட்டிடக்கலை படிப்புகளில் 2,200 இடங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *