போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், கடைசியாக அம்பலமாக்கியுள்ளது இலங்கை போர்குற்றம் பற்றியது.

இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுக்கு எதிராக 7 மாத காலம் போர் நடந்தது. இந்தப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும், சரணடைந்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்ட காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகின. ஆனாலும் அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றே இலங்கை ராணுவமும், அரசாங்கமும் சப்பை கட்டு கட்டி வந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதியன்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் பட்ரீசியா புடனிஸ் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது போர் குற்றங்கள் நடந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் பட்ரீசியா ‌அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் எதிர்‌ப்பு : இலங்கை போர்குற்றங்கள் குறித்து அந்நாட்டு டி.வி. சேனல் ஒளிபரப்பிய‌தால் கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரிட்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இலங்க‌ை தமிழர்கள் ராஜபக்ஷேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவரை கைது செய்ய‌க்கோரினர். இதனால் அவர் கைது செய்யப்படுவதாக பரபரப்பு வெளியானது. இந்நி‌‌லையில் தன்மீதான கைது நடவடிக்கை இல்லை என பிரிட்டன் அரசிடம் உறுதிமொழி பெற்றதைத்தொடர்ந்து ராஜபக்ஷே கைது நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. மேலும் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *