போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சி 36 நர்சு மாணவ- மாணவிகள் டிஸ்மிஸ் வேலையில் சேர முடியாது

posted in: மற்றவை | 0

போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து அரசு வேலையில் சேருவது, கல்லூரிகளில் படிக்க முயல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மருத்துவ, என்ஜி னீயரிங் கலந்தாய்வில் 60-க் கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் போலி சான்றுகள் தயாரித்து கல்லூரிகளில் சேர முயற்சித்தனர். சான்றிதழ் சரிபார்த்த போது அவர்கள் சிக்கினார்கள்.

மாணவ-மாணவிகளுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திருவேங்கடம், கல்லூரி இயக்குனர், அலுவலக குமாஸ்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நர்சு பயிற்சி பள்ளியிலும் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பயிற்சியில் மாணவ -மாணவிகள் சேர்ந்து படித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ்-2 போலி சான்றிதழ் மூலம் சென்னை அரசு நர்சு பயிற்சி பள்ளியில் 36 மாணவ-மாணவிகள் நர்சு டிப்ளமோ 3 ஆண்டு படிப்பில் சேர்ந்து படித்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நர்சாக பணியாற்ற நர்சு பயிற்சி படித்து முடித்திருக்க வேண்டும். நர்சு பயிற்சிக்கு பிளஸ்-2 மதிப்பெண் முக்கியமாகும். அரசு நர்சு பயிற்சியில் சேர ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி ஏற்படும்.

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தான் இடம் கிடைக்கும். கடந்த 2006-ம் ஆண்டு சென்னை நர்சு பயிற்சி பள்ளியில் மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்ட போது பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இடம் அளிக்கப்பட்டது.

3 ஆண்டுகள் பயிற்சியை முடித்த போது அவர்களது பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய அரசு தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை செய்ததில் 20 மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் போலியானது என கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவ- மாணவிகளின் சான்றிதழ் களும் ஆய்வு செய்யப்பட்டன. அதிலும் 13 பேரின் மார்க் பட்டியல் போலி என தெரிந்தது. 2009-2010-ம் ஆண்டு சேர்க்கையிலும் 3 பேர் போலியான மதிப்பெண் பட்டியல் கொடுத்து சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது வரையில் மொத்தம் 36 மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து சென்னை மருத்துவ கல்வி (எம்.எம்.சி.)யின் முதல்வர் மோகன சுந்தரம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத் (63), சரவணன் ஆகியோர் பிளஸ்-2 சான்றிதழில் மதிப்பெண்ணை திருத்தி போலி சான்றிதழ் தயாரித்தது தெரிய வந்தது. இதையொட்டி 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி வேலூர் காந்தி நகரை சேர்ந்த கோவிந்தசாமி (57) உடல் நலக்குறைவால் இறந்து போனார்.

போலி மார்க் மோசடியில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் இறந்து விட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த மோசடியில் ஈடுபட்ட 36 மாணவ-மாணவிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விசாரணை முடிவில் மாணவ-மாணவிகள் கைது செய்யப்படுவார்கள்.

இந்த மோசடி குறித்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை திருத்தி கூடுதலாக மார்க் போட்டு எலக்ட்ரானிக் டைப்ரைட்டர் மூலம் மோசடி செய்துள்ளனர். போலி மார்க் பட்டியல் கொடுத்த 36 மாணவ-மாணவிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 20 பேர் 3 ஆண்டு நர்சு டிப்ளமோ பயிற்சியை முடித்து விட்டனர். அவர் களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் கொடுக்கவில்லை. மேலும் அவர்களின் பயிற்சி முடிந்ததை “தகுதியின்மை” செய்துள்ளோம். நர்சு டிப்ளமோ சான்றிதழை ரத்து செய்து விட்டோம். அதனால் அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியில் சேர முடியாது.

தற்போது நர்சிங் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வந்த 16 மாணவ-மாணவிகள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களது பயிற்சியும் நிறைவு பெறாது. இனி அவர்களால் நர்சு பயிற்சியை முடிக்க இயலாது.

2006-ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்துள்ளது. நடப்பு ஆண்டு (2010-2011) முதல் சான்றிதழ் சரி பார்ப்பதில் புதிய முறை கடை பிடிக்கப்படுகிறது.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியலுடன் சி.டி.யும் வழங்கப்படுவதால் சான்றிதழ் ஒரிஜினல் தானா? என்பதை உடனே கண்டு பிடித்து விடலாம். இனி போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்து ஏமாற்ற முடியாது.

மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் ஆசையில் இது போன்ற தவறான முறையை பின் பற்றுவது எதிர்காலத்தை பாதிக்கும். அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். நேர்மையான முறையில் மாணவர்கள் கல்வி அறிவைப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *