சென்னை : தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 509 விவசாயிகள் 415 கோடி ரூபாய் அளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் முழு பயனையும் அடையும் வகையில், கூட்டுறவு வங்கிகள் எவ்வித சுணக்கமுமின்றி செயல்பட வேண்டும் என, முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். இதற்கேற்ப மாவட்ட கலெக்டர்கள், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களும் பயிர் காப்பீடு குறித்து முழுமையாக விவசாயிகள் அறிந்திடும் வகையில் விளம்பரம் செய்துள்ளார்கள். லும், கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்திட கடைசி நாள் இம்மாதம் 15ம் தேதி என்பதால், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து கூட்டுறவு சங்க தனி அலுவலர்கள், களப்பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 509 விவசாயிகள் 415 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்துள்ளனர். விவசாயிகள் கூடுதல் பிரீமியம் செலுத்த விரும்பினால் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பிரீமிய தொகை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply