சென்னை : வட இந்தியாவில் பெய்து வரும் மழை காரணமாகவும் , நியூஇயர் சீசன் என்பதாலும் இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல்லில் தற்போது ஒரு முட்டை ரூ. 2.65க்கு விற்கப்படுகிறது. இது கடந்த வாரம் இருந்த விலையை விட 15 பைசா அதிகமாகும். குளிர் காலத்தில் முட்டை விலை ஏற்றம் எதிர்பார்க்காத ஒன்று என நாமக்கல் முட்டை வியாபாரிகள் தரப்பு கூறுகின்றது. பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிராய்லர் ஒருங்கிணைப்புக்கு குழு கறி கோழியின் விலையை கிலோ ரூ. 10 அளவுக்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ கோழி ரூ. 55க்கு விற்கப்படுகிறது.
காய்கறி விலை தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில் கோழி, முட்டை சற்று கணிசமான செலவாகவே இருப்பதால் டிமாண்ட் அதிகரித்துள்ளதாக நாமக்கல் மாவட்டம் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தெரிவித்தார். முட்டை மற்றும் கறிக்கோழி விலை ஏற்றம் பிப்ரவரி வரை தொடரும் என்றும் வெயில் காலம் வந்த பிறகு விலை படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply