மும்பை: மும்பைக்குள் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறி்த்து இணை போலீஸ் கமிஷனர் ஹிமான்ஷு ராய் கூறியதாவது,
நகரத்தில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். அவர்கள் பெரும் சேதம் விளைவிக்கும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் திட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த 4 பேரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கிற்கு மேற்பட்டவர்கள் ஊடுருவியிருக்கிறார்களா என்று நான் யூகிக்க விரும்பவில்லை என்றார்.
இந்த வார துவக்கத்தில் லஷ்கர் தீவிரவாதிகள் மும்பை மற்றும் அகமதாபாத்தில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து இரு நகரங்களும் உஷார்படுத்தப்பட்டது.
தற்போது வந்துள்ள அச்சுறுத்தலால் கிறிஸ்தவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் மற்றும் மும்பை காவல்துறையின் தலைமையகம் ஆகியவற்றிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்துல் கரீம் மூசா, நூர் அப்துல் இலாஹி, வாலித் ஜின்னா மற்றும் மபூஸ் ஆலம் ஆகியோர் தான் தற்போது மும்பையில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ள போலீசார் இதில் ஜின்னாவின் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Read: In English
பொது மக்கள் இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 22633333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply