ஓமலூர்: “”மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை விவசாயிகளின் பாசன
வசதிக்காக திருப்பிவிட 1,100 கோடி ரூபாயில் புதிதாக திட்டமிடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது,” என வேளாண் அமைச்சர் அறிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இலவச கலர் “டிவி’ மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கலையரசி தலைமை வகித்தார். ஓமலூர் எம்.எல்.ஏ., தமிழரசு முன்னிலை வகித்தார். வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், “”மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீர் சேலம் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று எம்.எல்.ஏ., தமிழரசு கோரிக்கை விடுத்தார். இத்திட்டம் நிறைவேற்றப்பட சாத்தியக்கூறு இருப்பதாக சொன்னார். எனவே, இந்த திட்டம் 1,100 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்ற கருத்துரு தயாரிக்கப்பட்டு, முதல்வரிடம் கொடுக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது,” என்றார்.
Leave a Reply