ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்: தா.பாண்டியன்

posted in: அரசியல் | 0

திருச்சி: 2ஜி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி ஜாதிப் பெயரைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாநிதியின் இந்த செயல் தலித்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தா. பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது,

ரூ. 1. 76 லட்சம் கோடி ஊழலில் ஜாதி எங்கிருந்து வந்தது. இந்த ஊழலில் கிடைத்த ஒரு ரூபாய் கூட தலித்களுக்குப் பயன்படவில்லை. ராசா ஒரு தலித் என்பதால் அனைவரும் அவரையே குறிவைக்கின்றனர் என்று கருணாநிதி அன்மையில் தெரிவித்திருந்தார். ராசாவை காப்பாற்ற முயல்வதன் மூலம் கருணாநிதி தமிழகத்தில் உள்ள தலித்களை அவமானப்படுத்துகிறார்.

தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். திமுக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *