இந்தியா- நியூசிலாந்து மோதும் 4- வது ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. முரளி விஜய், சகா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முனாப் பட்டேல் நீக்கப்பட்டு பா. பட்டேல், ரோகித் சர்மா, பிரவீன் குமார், திவாரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்குலமும் குப்திலும் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணியின் ரன் விகிதம் அதிரடியாக உயர்ந்தது.
8.4 ஓவரில் 62 ரன் இருக்கும்போது முதல் விக்கெட் வீழ்ந்தது. குப்தில் 30 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் ஹவ் 4 ரன்னிலும், மெக்குலம் 42 ரன்னிலும் அவுட் ஆகினர். டெய்லர் 44 ரன்னும், ஸ்டைரிஸ் 46 ரன்னும் எடுத்தனர்.
அதன்பின் வந்த பிராங்க்ளின் அதிரடியாக விளையாடி 98 ரன் விளாசினார். இதனால் நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் குவித்தது. பிராங்க்ளின் கடைசிவரை 98 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியா தரப்பில் பதான் 3 விக்கெட்டும், நெக்ரா மற்றும் அஸ்வின் தாலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பினனர் களம் இறங்கிய இந்திய அணி 48.5 ஒவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காம்பீர் 27 ரன்கள் எடுத்து மெக்கே பந்தில் அவுட் ஆனார். பட்டேல் 53 ரன்கள் எடுத்து மெக்குலம் பந்தில் அவுட் ஆனார்.
திவாரி 37 ரன்களும், பதான் 127 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் வெற்றி வாய்ப்பை பெற்று தந்தனர். இதனால் 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Leave a Reply