60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

posted in: மற்றவை | 0

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண், தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை நேற்று நிறைவு செய்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த சுனில்குமார் மகள் சுகிஷா(20).

விமான பணிப்பெண் பயிற்சி முடித்துள்ள இவர், தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை கடந்த 9ம் தேதி காலை புதுச்சேரி அடுத்த பத்துக்கண்ணு போகோ லேண்ட் நீச்சல் குளத்தில், துவக்கினார்.

குளோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனையாளர் ராஜேந்திரன், நோட்டரி பாலசுப்ரமணியன், வக்கீல் பிரேம்குமார், லிம்கா நீச்சல் சாதனையாளர் பிரேமானந்தன் முன்னிலையில், தண்ணீரில் மிதக்கும் சாதனையை சுகிஷா கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்தார்.கொட்டும் மழை, கடும் வெயிலை பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்தார். தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த ”கிஷாவை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி பாராட்டி பே”கையில், “முந்தைய 53 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனையை முறியடித்து, கூடுதலாக 7 மணி நேரம் இடைவிடாது மிதந்துள்ள சுகிஷாவை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டார்.

சுகிஷாவின் சொந்த ஊர் மாகி. பத்து வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சுகிஷா, இதற்கு முன் கேரள மாநிலம் கொல்லத்திலும், கண்ணூரிலும் தொடர்ந்து 15 மணிநேரம் தண்ணீரில் மிதந்துள்ளார். தற்போது முதல் முறையாக, தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து குளோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *