அமெரிக்க மாணவர்களுக்கு கபடி கற்றுத் தரும் இந்திய ஆசிரியர்

posted in: உலகம் | 0

ஹூஸ்டன்: அமெரிக்க மாணவர்களுக்கு கபடி கற்றுத் தருகிறார் அஜய்குமார் நாயர் என்ற இந்தியர்.

கேரளாவைச் சேர்ந்த நாயர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். அத்தோடு இலக்கிய ஆசிரியரும் கூட. இவர் ஜான்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆறு மாத காலம் ஆசிரியராக வந்துள்ளார். புல்பிரைட் ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் நாயர் இங்கு பணியாற்றவுள்ளார் நாயர்.

இவர் அமெரிக்க மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கிறார். குறிப்பாக கபடியைக் கற்றுத் தருகிறார்.

ஜான்ஸ்பர்க்கில் உள்ள மத்திய பள்ளியில் பல்வேறு வயதுகளில் உடைய மாணவர்களுக்கு இவர் கலாச்சாரம் குறித்துப் பாடம் எடுக்கிறார். மாணவர்களை வெறும் காலுடன் கபடி விளையாட்டில் இவர் ஈடுபடுத்துகிறார். இந்தியாவில் மிகவும் பிரபலமான கபடியை அமெரிக்க மாணவர்கள் வியப்புடன் கற்றுக் கொள்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இங்கு பணியாற்றி வருகிறார் நாயர். இந்தியக் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறிப்பாக இலக்கியம், நடனம், உணவு, இசை, விளையாட்டு என பலவற்றையும் இவர் அமெரிக்க மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து நாயர் கூறுகையில், இங்கு வந்தது எனது அதிர்ஷ்டம்தான். இங்குள்ள மாணாக்கர்கள் மிகச் சிறப்பானவர்கள். எனது குடும்பமாக இவர்கள் மாறி விட்டனர். இங்கிருந்து நான் போகும்போது நிச்சயம் இவர்களை நான் மிஸ் செய்வேன் என்கிறார்.

ஜனவரி 28ம் தேதி வரை இங்கு இருப்பாராம் நாயர். அதன் பின்னர் தாயகம் திரும்பி விடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *