மும்பை: ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் விவகாரத்தில் மோசடியில் சில ராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக விரைவில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. சிபிஐ பறிமுதல் செய்த சில ஆவணங்கள் மூலம் இந்த மோசடி குறித்து தெரிய வந்துள்ளதாம்.
மகாராஷ்டிர மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சில தனிநபர்களுடன் இணைந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனராம்.
ஆதர்ஷ் ஊழல் வழக்கு தற்போது வலுவடைந்துள்ளதாகவும், விரைவில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஆதர்ஷ் சொசைட்டியில் உள்ள ஃபிளாட்டுகளை தங்களது பெயர்களுக்கு முன்னாள் ராணுவ தலைமைத் தளபதிகள் தீபக் கபூர், என்.சி. விஜ், முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி மாதவேந்திர சிங் ஆகியோர் ஒதுக்கிக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பான சர்ச்சை வெடித்தவுடன் தாங்கள் பெற்ற வீடுகளை திருப்பித் தந்து விடுவதாக அவர்கள் அறிவித்தனர். நவம்பர் 15ம் தேதி இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ.
Leave a Reply