மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் பயஸ்-பூபதி ஜோடி வெற்றி பெற்றால் அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற பெருமையைப் பெறுவார்கள்.
பயஸும், பூபதியும் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைத் தவிர அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளனர். இடையில் அவர்கள் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் இருவரும் டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதால், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியையும் வென்று முழுமை அடைய முடிவு செய்து தற்போது இணைந்து ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில்இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் பயஸ், பூபதி ஜோடி மேக்ஸ் மிர்னயி, டேணியல் நெஸ்டர் ஜோடியை 7-6 (5), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
Leave a Reply