புனே : சர்வதேச அளவில் இஞ்ஜின்கள் தயாரிப்பு மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமான கும்மின்ஸ் நிறுவனம், இந்தியாவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கும்மி்ன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிம் சோல்சோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அடுத்த 5 ஆண்டுகளில், 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன்மூலம், இலகுரக டீசல் இஞ்ஜின்கள், பவர் ஜெனரேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் எமிசன் சொல்யூசன் உபகரணங்கள் தயாரிப்பை இந்தியாவில் துவக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாக உள்ளதாகவும், இதனை கருத்தில்கொண்டே, தாங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததாக மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply