மெல்போர்ன்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கெவின் ரூதை சந்தி்க்கும் அவர் இரு நாட்டு பொருளாதார உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
குறிப்பாக இந்திய அணு உலைகளுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்குவது குறித்து அப்போது விரிவாகப் பேசப்படவுள்ளது. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்குப் பின்னரும் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா தொடர்ந்து பல நிபந்தனைகளைப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகில் மிக அதிகமான யுரேனிய தாது கொண்டு நாடு ஆஸ்திரேலியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டையும் கிருஷ்ணா சந்தித்துப் பேசவுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வந்ததும், சமீப காலமாக தாக்குகள் பெரும்பாலும் நின்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply