வாஷிங்டன் : “இந்தியா – அமெரிக்கா இடையே தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான உறவு உள்ளது. அதனால்தான், அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று அதிபர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை பத்திரிகை பிரிவுச் செயலர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது: அதிபர் பராக் ஒபாமா, கடந்த நவம்பரில் இந்திய பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்திற்கும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவின் அமெரிக்கப் பயணத்திற்கும் வேறுபாடு உள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையே தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான உறவு உள்ளது. அதனால்தான் அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த கிளின்டன், ஜார்ஜ் வாக்கர் புஷ் மற்றும் ஒபாமா என, மூன்று அதிபர்களும் இந்தியப் பயணம் மேற்கொண்டனர். சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கும், இந்தியாவுடனான உறவுகளுக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாக அளவிட முடியாது. இவ்வாறு ராபர்ட் கிப்ஸ் கூறினார்.
Leave a Reply