புதுடில்லி: செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் புதிய தலைவராக யு.கே. சின்கா நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய பங்குச்சந்தை வாரியமான செபியின் தலைவராக தற்போது சி.பி.பகேவ் கடந்த 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.இந்நிலையில் செபியின் புதிய தலைவராக யு.கே. சின்கா நியமிக்கப்பட்டுள்ளர். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சின்கா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். சந்தை மூலதனம், நிதித்துறை அமைச்சக செயலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.தற்போது யு.டி.ஐ. (யுனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா ) அமைப்பின் நிர்வாக இயக்குனர், மற்றும் சொத்து மேலாண்மை நிறுவன தலைவராகவும் உள்ளார். 1992-ம் ஆண்டு சட்டம் சந்தை ஒழு்ங்குகளை ஏஜென்சியின் படி செபியின் 6-வது தலைவராக சின்கா நியமிக்கப்பப்டுள்ளார். சின்கா அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ள இவர் மூன்றுஅல்லது ஐந்து ஆண்டுகள் செபியின் தலைவராக இருப்பார்.
Leave a Reply