இந்திய இராணுவத் துருப்பினர் பலர் இலங்கையின் புலனாய்வுத் தரப்புக்கு தெரியாமல் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு இந்திய தலைவர்களின் விஜயத்தின் போது அவர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் பிரதான அரசாங்க தரப்பு அரசியல் தலைவர்களுடன், குறித்த புலனாய்வுப்பிரிவினர் தொடர்புகளை பேணி வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் இந்தியாவின் உளவு அமைப்பான ரோ வின் குழுவினர் புலனாய்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உளவுப் பணியில் ஈடுபட்டு வந்த சிலர் அண்மையில் கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் உயர் மட்ட அரசியல் அழுத்தங்களின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக புலனாய்வுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply