உலகின் பெரிய பணக்காரர் ‌தொடங்கும் அருங்காட்சியகம்

posted in: உலகம் | 0

மெக்சி‌கோசிட்டி: உலகில் மிகவும் பணக்காரர் ‌என போர்ப்ஸ் பத்திரிகையினால் புகழப்பட்ட மெக்சிகோ நாட்டு தொழிலதிபர் ‌கார்லோஸ் ஸ்லீம் என்பவர் மெக்கி‌கோசிட்டி நகரில் கலைநுட்பத்துடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்ற‌ை நிறுவ உள்ளார்.

இதற்கான மெக்சி‌கோ சிட்டியில் 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஐரேப்பிய நாட்டு கட்டட வடிவமைப்பாளர் ஈல்-கிரிகோ என்பவர் வடிவமைத்து தரவுள்ளார். இதில் 66 ஆயிரம் பணியாளர்கள் பல்வேறு கலைஞர்களின் கைவண்ணத்தில் அரங்குகள் நிர்ணயித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டினை தொழிலதிபர் மருமகன் பெர்னாண்டோ ரோமிரே எனும் கட்டிட வடிவமைப்பாளர் செய்து வருகிறார். இற்கான திட்டம் கடந்த2008-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வரும் ஏப்ரல் மாதம் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *