கறுப்பு பணம் பதுக்கல் :இந்தியாவிற்கு நான்காமிடம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: முறைகேடான பணத்தை சேமித்து வைக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா நான்காமிடத்தை பெறுகிறது என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.


முதலிடத்தை சீனா பிடித்துள்ளது. கடந்த 2000முதல் 2008 வரையிலான காலகட்டங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி சீனா 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கும், இரண்டாவது இடத்தை பிடித்துள்ள மலேசியா நாடு 291 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கறுப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளது. மூன்றாம் இடம் வகிக்கும் பிலிப்பைன்சில் 109 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமமே பதுக்கிவைத்துள்ளது. இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்நாடுகளின் கறுப்பு பண அளவு சுமார் 104 மில்லியன் ஆகும். கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதில் பெரும்பாலும் ஆசிய நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளே இத்தகைய செயல்களில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *