பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டு வருகின்ற புலானாய்வுப் பிரிவினரே, வடக்கில் இடம்பெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக தமிழ்நெற் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த தனிப்பட்ட புலனாய்வு அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்கு மாத்திரமே தமக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழு வவுனியா ஓமந்தை சோதனை சாவடிக்கு அருகில் முகாம் அமைத்து செயற்பட்டு வருவதாகவும் இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply