ரியாத்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெட்டா நகரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 500 முதல் 800 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். சவுதியில் அமைய உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஏற்கனவே தங்க நகை தொழிலில் சுமார் 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. அரபு நாடுகளிலேயே சவுதி அரேபியா மட்டுமே உலகளவில் அதிகளவு தங்கத்தை விரும்பும் நாடுகளின்வரிசையில் 16-வது இடத்தை பிடித்துள்ளது.மேலும் அன்னியச்செலாவணிக்கு ஈடாக 323 டன் தங்கத்தை வைத்துள்ள நான்காவது நாடாக உள்ளது.
Leave a Reply