வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, கண்ணாடி கூரை (சன்ரூஃப்) பொருத்திய சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கார் விற்பனை சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கண்ணாடி கூரை பொருத்தப்பட்ட கார்களை சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இந்த வரிசையில் ஹோண்டா நிறுவனமும் இணைந்துள்ளது.
தனது பிரிமியம் ரக சிவிக் மாடல் காரில், கண்ணாடி கூரை பொருத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். இந்த காரை அறிமுகம் செய்து வைத்து பேசிய ஹோண்டா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணை தலைவர் கூறியதாவது:
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க கண்ணாடி கூரை பொருத்திய சிவிக் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணாடி கூரை சிவிக் மாடலுக்கு கூடுதல் பொலிவு தரும். புதிய அர்பன் டைட்டானியம் கலரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிவிக் மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.
தானியங்கி (ஆட்டோமேட்டிக்) கியர் வசதி கொண்ட மாடல் ரூ.14.27 லட்சம் விலையிலும், கையால் கியர் மாற்றும் வசதி கொண்ட மாடல் ரூ.13.53 லட்சம் விலையிலும் கிடைக்கும்.
ஹோண்டாவின் சிறப்புமிக்க 1.8 லிட்டர் ஐ-விடெக் தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம், காரின் பிக்கப் அதிகரிப்பதோடு, மிகுந்த எரிபொருள் சிக்கனத்தையும் தர வல்லது. மேலும்,இந்த இன்ஜின் லிட்டருக்கு 15.5 கி.மீ.,மைலேஜ் தரும்’என்று கூறினார்.
Leave a Reply