இந்தியாவில் தொழில் நுட்பப் படிப்புகளுக்கு பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி.,க்களில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முக்கிய இடம் உண்டு.
1959ல் இந்திய ஜெர்மனி உடன்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட சென்னை ஐ.ஐ.டி., சாதனைகளில் முத்திரை பதித்து வருகிறது. இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தில் இந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடத்தப்பட உள்ள கோடைகால பெல்லோஷிப் புரோகிராமிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
தேவை என்ன
சென்னை ஐ.ஐ.டி.,யின் கோடைகால பெல்லோஷிப் படிப்பில் பின்வரும் தகுதி உடையவர்கள் இணையலாம்: தற்போது பி.இ., பி.டெக்.,பி.எஸ்சி., (இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகளில் மூன்றாவது ஆண்டு படிப்பவர்கள், இன்டகரேடட் எம்.இ., எம்.டெக்., படிப்பவர்கள், எம்.இ.,எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ.,எம்.பி.ஏ., ஆகிய படிப்புகளில் பல்கலைக் கழக அளவில் முதன்மை பெற்றவர்கள், கணித ஒலிம்பியாட் போன்ற முக்கிய கருத்தரங்கங்களில் தங்களது படைப்புகளை வழங்கியவர்கள், மற்றும் இதர சிறப்பு பெற்ற
சாதனையாளர்கள். ஐ.ஐ.டி.,யில் படித்து வரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
ஊக்கத் தொகை எவ்வளவு
இந்த பெல்லோஷிப் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிக பட்சம் இரண்டு மாதங்களுக்குத் தலா ரூ.6 ஆயிரத்து ஐநூறை ஸ்டைபண்டாகப் பெறலாம்.
என்னென்ன பிரிவுகள்
சென்னை ஐ.ஐ.டி., நடத்தும் கோடைகால பெல்லோஷிப் திட்டத்தில் ஏரோஸ்பேஸ், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல்,சிவில்,கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் டிசைன், எலக்ட்ரிகல், மெக்கானிகல், மெட்டலர்ஜிகல் அண்டு மெட்டீரியல்ஸ், ஓஷன் ஆகிய இன்ஜினியரிங் துறைகளும், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் துறைகளும், ஹியூமானிடிஸ் அண்டு சோசியல் சயின்ஸ் மற்றும் நிர்வாகவியல் துறைகளும் பங்கு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி
சென்னை ஐ.ஐ.டி.,யின் பெல்லோஷிப் திட்டத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவைப்படும் இணைப்புகளையும் சேர்த்து
பின்வரும் முகவரிக்கு 18.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
Leave a Reply