டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று டெல்லி சென்றார் கருணாநிதி. நேற்று அமைச்சர்கள் சரத் பவார், வயலார் ரவி ஆகியோர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அவரிடம் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவது குறித்து தனது கவலையை தெரிவித்த முதல்வர் இதைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
மேலும் தமிழக மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1800 கோடி தர வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு கோரியுள்ளதை பிரதமரிடம் தெரிவித்த முதல்வர், அதை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக, தேசிய அரசியல் நிலவரம் மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து பேசப்பட்டது.
Leave a Reply