சென்னை: தமிழகத்தில் பால் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆவின் பால் முதல் அனைத்து நிறுவன பால் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தது 50 பைசா முதல் 2 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருமலா பாலின் விலை குறைந்தது ரூ. 50 முதல் 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தயிரின் விலையை மட்டும் இவர்கள் உயர்த்தவில்லை. அதேபோல ஆவின் பாலின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பால் விலை உயர்வால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கிடையே, பால் விலையை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக பால் முகவர்கள் அறிவித்துள்ளனர்.
சிகரெட் விலையும் உயர்வு!
இதற்கிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் சிகரெட்டின் விலையையும் வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர். குறைந்தது 50 பைசா வரை விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது. திடீரென இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பதால் புகை பிடிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பட்ஜெட்டே இன்னும்வரவில்லை. அதற்குள் சிகரெட் விலை உயர்த்தப்பட்டிருப்பது எப்படி என்பது புகை பிடிப்பாளர்களுக்குப் புரியவில்லை. விலை உயர்த்தப்பட்டதோடு, பல பகுதிகளில் சிகரெட் சப்ளை இல்லை என்றும் கடைக்காரர்கள் கூறுவதால் புகை பிடிப்பாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.
Leave a Reply