விருதுநகர்:””இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி(பி.எப்.) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31 க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
தொழிலாளர்களுக்கு தாமதம் இல்லாமல் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என மதுரை மண்டல கமிஷனர் விஜயகுமார் தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த தொழிலாளர்களுக்கு பென்சன் உத்தரவு வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது: ஓய்வு பெற்ற பின், தொழிலாளரின் வைப்பு நிதி விண்ணப்பத்தில் மொபைல்போன் எண் பெறப்படும். விண்ணப்பம் பெறப்பட்டு பதிவு செய்தவுடன், பதிவு எண்ணுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். பின், கணக்கு முடிக்கப்பட்டு அந்த தொகை தயாரானவுடன், மீண்டும் செக் நம்பர், வங்கி, கணக்கு முடிக்கப்பட்ட தேதியுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.ஒரு தொழிலாளர், வைப்பு நிதி பெறும் காலம் ஒரு மாதத்திற்கு மேல் என்று இருந்த நிலை மாறி, உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பி.எப்., அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து “கோர் பேங்கிங்’ வசதி செய்யப்படவுள்ளது. பி.எப்., பெறுவதற்கான விண்ணப்பத்தில், வங்கி பாஸ் புக் எண்ணுடன் நகல் எடுத்து இணைத்து அனுப்பினால், உடனடியாக தொழிலாளி கணக்கு வைத்துள்ள வங்கிக்கு பணம் மாறுதல் செய்யப்படும். மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பி.எப்., கணக்குகளை முடித்து வட்டியில்லாமல் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது,” என்றார்.
Leave a Reply