பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்றான பட்னி கம்ப்யூட்டர்ஸை ரூ 1.2 பில்லியன் டாலருக்கு ஐகேட் கார்ப்பொரேஷன் நிறுவனம் வாங்கியுள்ளது.
பட்னி நிறுவனத்தின் உரிமையாளர்களான நரேந்திரா, கஜேந்திரா மற்றும் அசோக் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இந்தியாவின் 7 வது பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமாக இருந்த ஐ கேட் இன்னும் ஒரு படி உயர்ந்துள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி முதலில் பணியாற்றியது பட்னி நிறுவனத்தில்தான். இப்போது பட்னியை வாங்கியுள்ள ஐகேட்டின் சிஇஓ பனீஷ் மூர்த்தி வேறு யாருமல்ல… இன்போஸிஸ் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாகவே திரைமறைவில் இந்த டீலுக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வந்தன.
பட்னி நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு ரூ 503.5 என்ற விலையில் செட்டில்மெண்ட் ஆகியுள்ளது.
நரேந்திரா, கஜேந்திரா மற்றும் அசோக் ஆகிய மூன்று சகோதரர்களுக்கும் பட்னி நிறுழனத்தில் 45.6 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றோடு மேலும் 40 சதவீத பங்குகளை வாங்குகிறது. இதன் மூலம் பட்னியில் ஐகேட்டின் பங்கு அளவு 85 சதவீதமாக இருக்கும்.
இந்த டீலுக்கான தொகையின் ஒரு பகுதியை கனடாவின் ராயல் வங்கியிடம் பெறுகிறது ஐகேட்.
வருமான அடிப்படையில் பார்த்தால் பட்னி கம்ப்யூட்டர்ஸ் கடந்த 9 மாதங்களில் 518.7 மில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. ஆனால் ஐகேட் அதில் பாதியைக் கூட வருமானமாகப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply