டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. 28ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
லோக்சபா முன்னவரும், நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்த நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சரத் பவார், மமதா பானர்ஜி, வயலார் ரவி, வீரப்ப மொய்லி, தயாநிதி மாறன், பவன் குமார் பன்சால், நாராயணசாமி, அஸ்வனி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் 21ம் தேதியன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பன்சால் கூறுகையில், பிற விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் தொடரையும் அமளி துமளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply