புகழ்பெற்ற இணையதளம் ஆபீசுக்கு தீ வைப்பு; இலங்கையில் பத்திரிகைக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகை மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை வரிசையில் உள்ளது லங்காஇநியூஸ்.காம் இந்த பத்திரிகை ஆங்கிலம் , சிங்களம், தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.கொழும்பு அருகே உள்ள இந்த இணையதள ஆபீசுக்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று அலுவலக முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் தீயை வைத்து கொளுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது. இதில் ஆபீசின் கம்ப்யூட்டர் அறை மற்றும் நூலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

தீ எரிந்த சம்பவம் குறித்து அக்கம், பக்கம் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தீயணைக்கும் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இந்த இணையதள ஆபீஸ் தீ வைப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் மாயம்: இந்த இணையதள பிரபல கார்ட்டூனிஸ்ட் பிரகீத் என்பவர் காணாமால் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ராஜபக்சே இந்த சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

17 பத்திரிகையாளர்கள் கொலை : அதிபர் ராஜபக்சே காலத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. இதுவரை 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *