மும்பை: இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் அதிக ஆர்வம் காட்டியது மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகள் பலவீனமாக உள்ளது போன்ற காரணங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையும் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 301.70 புள்ளிகளை இழந்தது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 79.55 புள்ளிகள் சரிந்தது.
கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் விலையிலும் இந்த வீழ்ச்சி எதிரொலித்தது.
Leave a Reply