சென்னை:””மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், 4சதவீத வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன,” என, சென்னைஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன்பேசினார்.”
சர்வீஸ் பார் அசோசியேஷன்’ சார்பில், சென்னை ஐகோர்ட் வளாகத்தில்செயல்படும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் வெள்ளி விழா, சென்னைஆர்.ஏ.புரம், “தமிழ்நாடு ஸ்டேட்ஜூடிசியல் அகடமி’ வளாகத்தில்நேற்று நடந்தது. விழாவில்,சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:பணியிடை நீக்கம், பணி இடமாற்றம் உள்ளிட்ட பணி ரீதியாக, மத்தியஅரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க, 1985ம் ஆண்டு நவம்பரில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் துவங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட்ட இத்தீர்ப்பாயத்தால், ஐகோர்ட்டுகளில் மத்திய அரசுஊழியர்கள் தாக்கல் செய்து, நிலுவையில் இருந்த, “ரிட்’ மனுக்களைவிரைந்து முடிக்க வழிவகை ஏற்பட்டது.கடந்த 1985 நவம்பர் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, இந்தியாவில்உள்ள அனைத்து மத்திய நிர்வாகதீர்ப்பாயங்களிலும், மொத்தம் ஐந்துலட்சத்து 62 ஆயிரம் வழக்குகள் பதிவாகிஉள்ளன. அவற்றில், ஐந்து லட்சத்து 43 ஆயிரம் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத் தீர்ப்பாயத்தில் பதிவாகும் வழக்குகள் ஒரு ஆண்டிற்குள்தீர்க்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம். மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்நான்கு சதவீத வழக்குகளே நிலுவையில் உள்ளன.இவ்வாறு ராமசுப்ரமணியன் பேசினார்.மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன்பேசும் போது, “”மத்திய நிர்வாகதீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து,வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த மாநில ஐகோர்ட்டில்மேல் முறையீடு செய்யலாம்.ஆனால், இந்திய ராணுவத்தினருக்கானதீர்ப்பாயத்தில் வழங்கப்படும்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில்தான் நேரடியாக மேல்முறையீடுசெய்கின்றனர். இதில் மாற்றம்கொண்டு வர வேண்டும்,” என்றார்.மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின்சென்னை பெஞ்ச் உறுப்பினர்இளங்கோ பேசும் போது, “”எங்கள்பெஞ்ச் கடந்த இரண்டு ஆண்டுகளில், வழக்குகளை விரைந்து முடிப்பதில், இந்திய அளவில் ஏழாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது,” என்றார்.விழாவில், சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகப்பன், தமிழக அட்வகேட்ஜெனரல் ராமன், “சர்வீஸ் பார் அசோசியேசன்’ தலைவர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply