புதுடில்லி : எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள பானோசோனிக் நிறுவனம், நேரடி விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள கேகே மோடி குழுமத்தின் ஒருஅங்கமான மோடிகேர் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பானோசோனிக் இந்தியா நிறுவன தலைவர் டெய்ஜோ இடோ வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பெர்சனல் கேர், கலர் காஸ்மெட்டிக்ஸ், ஸ்கின் கேர், ஹோம் கேர், புட் மற்றும் பீவரேஜஸ் மற்றும் ஹெல்த் அண்ட் வெல்னெஸ் பிரிவுகளில் நேரடி விற்பனை செய்துவரும் மோடிகேர் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் நிறுவன பொருட்களையும் வர்த்தகம் செய்ய உள்ளோம். இந்த ஒப்பந்தத்தின்படி, பானோசோனிக் நிறுவனத்தின் குறிப்பிட்ட பெர்சனல் கேர் பொருட்கள், மோடிகேர் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. நாட்டில், 40 இடங்களில் டிஸ்டிரிபியூசன் சென்டர்களை கொண்டுள்ள மோடிகேர் நிறுவனம், 2,700 டீலர்களை கொண்டுள்ளது. மோடிகேர் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்ள இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம், தங்கள் நிறுவனத்தின் வர்த்தகம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply