லண்டன்-பொதுக் கழிவறையை விட ஏடிஎம் எந்திரங்கள் அசுத்தம்

posted in: உலகம் | 0

லண்டன்: இங்கிலாந்தில் பொது இடங்களில் உள்ள கழிவறையை விட ஏடிஎம் இயந்திரங்கள் மகா அசுத்தமாக இருப்பதாகவும், நோய் பரப்பும் கிருமிகள் அதிக அளவில் இருப்பதாகவும் அந்நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஏடிஎம் இயந்திரங்களின் சுத்தம் குறித்து அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஏடிஎம் இயந்திரங்கள் பொதுக் கழிவறையை விட அசுத்தமாகவும், நோய்க் கிருமிகள் நிறைந்ததாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு ஏடிஎம் இயந்திரத்தை தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அதில் எத்தனையோ பேர் அழுக்கான கைகளுடன் பயன்படுத்தலாம். அப்போது அவர்கள் கையில் உள்ள கிருமிகள் ஏடிஎம் இயந்திரத்தின் பட்டன்களில் தங்கி விடுகின்றன.

அதை மற்றவர்கள் அழுத்தும்போது அவர்கள் கையில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் எளிதில் நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே, ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவோர் கையுரை அணியுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தவிர பொதுத் தொலைபேசிகள் மூலமாகவும் நோய்கள் பரவுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்ம ஊரு ஏடிஎம் களை எப்போது நமது ஆராய்ச்சியாளர்கள் ‘நோண்டி’ச் சொல்லப் போகின்றனரோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *