சென்னை : ‘பிரீத்திக்கு நான் கியாரண்டி’ என்ற சொல் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாயா அப்ளையன்சஸ் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில், 45 சதவீத அளவிற்கு விற்பனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாயா அப்ளையன்சன்ஸ் நிறுவன உயர் அதிகாரி சித்தார்த் கூறியதாவது : கடந்த நிதியாண்டில், தங்கள் நிறுவனம், ரூ. 302 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டில், 45 சதவீதம் அதிகரித்து, ரூ. 450 கோடி என்ற அளவிலும், 2012ம் ஆண்டில் ரூ. 650 கோடி என்ற அளவிற்கு வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசத்தில், தங்களது நிறுவனம் சார்பில் 7 உற்பத்தி யூனிட்கள் செயல்பட்டு வருவதாகவும், சென்னையில், இண்டக்சன் குக்கர்கள் தயாரிப்பு யூனிட்டை புதிதாக துவக்க உள்ளோம். தங்கள் நிறுவனம், கடந்த ஆண்டில், 20 ஆயிரம் இன்டக்சன் குக்கர்களை விற்பனை செய்துள்ளதாகவும், இந்தாண்டில் 2 லட்சம் குக்கர்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம். நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதியில், தங்கள் நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக, 9 ஆயிரம் டீலர்கள் செயல்பட்டு வருவதாகவும், 2011ம் ஆண்டின் இறுதிக்குள், 1000 புதிய டீலர்களை நியமிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply