வீரர்கள் என்ன விலை ? ஐ.பி.எல்., அணியில் யார் ? யார்? பெங்களூவில் கோடி கூடிய ஏலம் துவங்கியது

posted in: மற்றவை | 0

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். இந்திய வீரர் கவுதம்காம்பீர் கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

இந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். அதிகப்பட்சம் தொகை கங்குலி, டிராவிட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது.

புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக “டுவென்டி-20′ தொடர் நடந்தது. நான்காவது தொடர் வரும் ஏப்., 8 ல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

வீரர்கள் தக்கவைப்பு :சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.

கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம். 4 வீரர்களை தக்கவைத்துள்ள மும்பை, சென்னை அணிகள் ரூ. 20 கோடியை மட்டும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *