சென்னை: வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!
சென்னையில் கடந்த சில மாதமாக காய்கறி விலை குறையாமல் அதிக விலைக்கே விற்கப்படுகிறது. வெங்காயம் விலை கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.50 வரை இறங்கியது. ஆனால் அதன் பிறகு மீண்டும் ரூ.55 வரை உயர்ந்தது. இன்னும் குறைய வில்லை. வெங்காயத்தின் இன்றைய விலை ரூ 58.
தக்காளி இப்போதும் கிலோ ரூ 38 முதல் 42 வரை விற்கப்படுகிறது. நாட்டுத் தக்காளியை சில்லறை விற்பனைக் கடைகள் ரூ 45 வரை விலை வைத்து விற்கின்றன.
அடுத்து முருங்கைக்காய் சிறியது ஒன்று 10 ரூபாய்க்கும், பெரிய முருங்கைக்காய் ரூ.20-க்கும் விற்கத் தொடங்கியுள்ளனர்.
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் வெண்டைக்காய் விலை அதிகபட்சமாக உயர்ந்து கிலோ 60 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறது. மாங்காய் ஒரு கிலோ ரூ.80 ஆக உள்ளது. ஒரேயொரு பெரிய சைஸ் மாங்காய் ரூ 40க்கு விற்பனையாகிறது.
சில காய்கறிகள் விலை குறைந்தாலும் வெளி கடைகளில் தொடர்ந்து அதிக விலைக்கே விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply