ஜம்மு: ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஜனவரி 26ம் தேதி கொடியேற்று விழாவில், கலந்து கொள்வதற்காக 50,000 பேர் ஸ்ரீநகருக்கு வரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சாம்ஷெர் சிங் மன்ஹாஸ் கூறுகையில், ஜனவரி 25ம் தேதியே நாடு முழுவதிலுமிருந்து 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஸ்ரீநகருக்கு திரண்டு வரவுள்ளனர்.
அனைவரும் லால் சவுக்கில் நடைபெறும் கொடியேற்று விழாவில் கலந்து கொள்வார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கும் சக்தி எந்தப் படையிடமும் இல்லை. இதைத் தடுக்க மாநில அரசு எந்த முயற்சியையாவது எடுத்தால் அதை நாங்கள் முறியடிப்போம். லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. அவரது பேச்சுக்கள் எல்லாம் அதைத்தான் காட்டுகிறது என்றார் அவர்.
Leave a Reply