சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசும்போது,”ஹோம் சயின்ஸ் பாடத்தில் பி.எட்., படித்த ஏராளமானோர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
“ஹோம் சயின்ஸ்’ என்ற மனையியல் பாடமும், ஒரு அறிவியல் பாடம் தான். எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்றார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது,”ஹோம் சயின்ஸ், அறிவியல் பாடம் கிடையாது. இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவை தான் அறிவியல் பாடங்கள். ஹோம் சயின்ஸ் பாடம் அறிவியல் பாடமாக கருதி, வேலை வழங்கலாமா என ஏற்கனவே அரசு ஆலோசனை செய்து, ஹோம் சயின்ஸ் அறிவியல் பாடம் இல்லை என முடிவு செய்துள்ளது’ என்றார்.
Leave a Reply